என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்.
சில நாட்களாக நான் தமிழில் எழுதவில்லை. 2008-இலாவது அதிகமாக எழுத முயல்கிறேன்.
என் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
என் புதிய பட்டம் "கவிப்புயல்". ஏனென்று கேளுங்கள்! கேட்காவிட்டாலும் நான் சொல்கிறேன். இந்த இனிய, கருத்துள்ள, தத்துவம் நிறைந்த பாடலைப் எழுதியுள்ளேன். படித்து மகிழுங்கள். கவிஞர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரபலங்களே வியக்கும் அளவுக்கு இந்த கவிதையில் அழகுள்ளது. ![]()
தினமும் பாடி வாருங்கள். பாடிக்கொண்டே, "ஹரி வாழ்க வளமுடன்" என்று கூறுங்கள்! 
ஓடி வா ஓடி வா ஓடி வா ஓடி வா,
ஓடி ஒடி ஓடி ஓடி ஓடி வா! (2)
ஒடி வா! நீ ஓடி வா!
ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி வா!
ஓடி வா! நீ ஓடி வா வா!
ஓடாமலே நீ ஓடி வா! (ஓடி வா)
ஓடி ஓடி வா, நீ ஓடி ஓடி வா,
ஓடாமலே நீ ஓடி வா!
ஓடி ஓடி வா, நீ ஓடி ஓடி வா,
ஓடாமலே நீ ஓடி வா (ஓடி வா)
ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி வா,
நீ ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி வா!
ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி வா,
எப்பொழுதும் நீ ஓடி வா! (ஓடி வா)
நவராத்திரியை ஒட்டி சென்னையில் மழை காலம் ஆரம்பித்துள்ளது. வெப்பம் குறைந்துவிட்டதனால் எல்லோறுக்கும் மகிழ்ச்சியான காலம் இது. ஆனால் அதே நேரத்தில் இந்த காலத்தில்தான் கொசுத்தொல்லை அதிகமாகும், சாலைகளில் மழைநீர் தேக்கம் ஏற்படும், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களும் ஊழலாகிவிடும்.
மாறும் வெப்பநிலையினாலும், கொசுக்களினாலும், குடிக்கும் தண்ணீரில் பரவும் கிருமிகளாலும் நம் உடல்நிலை பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனக்கே இரண்டு மூன்று நாட்களாக தொண்டை சரியில்லை. பொதுவாக இந்த வானிலை மாற்றத்தின் முதல் கால கட்டத்தில்தான் இப்படியெல்லாம் நோய்கள் அதிகமாக பரவும். மேலும் மழை வந்தால் கவலை இல்லை.
செய்தியை வாசிப்பது உங்கள் அபிமான ஹரிஷங்கர்! ![]()
இந்த இடுகையை, என் எண்ணங்களை தமிழில் பதிவுசெய்யலாம் என்ற ஒரு ஆசையில் ஆரம்பித்துள்ளேன். எப்படிப்போவதென்று பார்க்கலாம்!
முடிந்த அளவு, நான் நகைச்சுவையாக எழுத முயற்சி செய்கிறேன். அதிகமாக உளறினால் மன்னிக்கவும். என் பேத்தலைப்படிக்க தயாராகுங்கள், என் இனிய தமிழ் மக்களே! ![]()